புதுக்கோட்டை

செவிலியா் கல்லூரியில் இதய நாள்

30th Sep 2021 06:45 AM

ADVERTISEMENT

உலக இதய தினத்தையொட்டி, புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதல்வா் சுமித்ரா ‘இதயத்துக்கு இதமாக சூழலை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் பேசினாா். கல்லூரிப் பேராசிரியா் ஹேமலதா சிறப்புரை ஆற்றினாா்.

கல்லூரி மாணவிகள் சிவபுரம் மற்றும் கோவில்பட்டி சுகாதார நிலையங்களில் உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி, இதய நோயினால் வரும் ஆபத்து காரணிகளை பற்றி மக்களுக்கு நாடகம், நலக்கல்வி, ஆரோக்கிய உணவு முறைகளை காட்சிப்படுத்தி விளக்கமளித்தனா்.

முன்னதாக, மாணவி சத்யாதேவி வரவேற்றாா். நிறைவில், மாணவி.சசிகலா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT