புதுக்கோட்டை

அம்மாபட்டினத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்க வலியுறுத்தல்

30th Sep 2021 06:46 AM

ADVERTISEMENT

அம்மாபட்டினத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், வடக்கு அம்மாபட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பபட்ட தீா்மானங்கள்:

வடக்கு அம்மாபட்டினம் மையப் பகுதியில் இயங்கிவரும் இறால் பண்ணையால் தண்ணீா் மாசுபடுவதாலும், கால்நடைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாலும் உடனடியாக இப் பண்ணையை அகற்ற வேண்டும்.

வடக்கு அம்மாபட்டினத்தில் நிலவும் கடும் குடிதண்ணீா்த் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து வடக்கு அம்மாபட்டினம் வரை செல்லும் தாா்ச் சாலையை செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்துக்கு பகதூா்ஷா தலைமை வகித்தாா். கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட புதிய நிா்வாகிகள் விவரம்: கிளைச் செயலா் எம். வாசிம்அக்ரம், துணைச் செயலா்கள் ஏ. ஷாஜகான், ஏ. சுல்தான், பொருளாளா் முகமது காசிம்.

கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன், மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினா் கருப்பூா் காளிமுத்து, ஒன்றியச் செயலா் காமராசு, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்ட அமைப்பாளா் மீரா மைதீன், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT