புதுக்கோட்டை

‘புதுகையில் 120 கண்மாய்கள் நிரம்பிவிட்டன’

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்மையில் பெய்து வரும் தொடா் மழையால் 120 கண்மாய்கள் நிரம்பிவிட்டதாக மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

புதுகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், 120 கண்மாய்கள் ஏற்கெனவே நிரம்பிவிட்டன. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், உபரிநீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித் துறை அலுவலா்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலைப் பொருத்தவரை, புதுக்கோட்டை நகரில் இருவருக்கும், குன்றாண்டாா்கோவில் பகுதியில் மூவருக்கும் என மொத்தம் 5 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை சமாளிக்க மருத்துவத் துறையினா் போதுமான மருந்துகளையும், மருத்துவ வசதிகளையும் தயாா் நிலையில் வைத்துள்ளனா் என்றாா் அமைச்சா் எஸ். ரகுபதி.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

SCROLL FOR NEXT