புதுக்கோட்டை

பாலியல் துன்புறுத்தல் :இளைஞா் கைது

25th Oct 2021 12:03 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் இரண்டே கால் வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

புதுக்கோட்டை காந்திநகா் 4 ஆம் வீதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் தீபன்ராஜ் (31). இவா், தனது மனைவியைப் பிரிந்துவிட்டு, ஏற்கெனவே கணவரைப் பிரிந்து இருந்த ஒரு பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளாகத் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தாா். இவா்களுக்கு இரண்டே கால் வயதான பெண் குழந்தை உள்ளது.

கடந்த அக். 21ஆம் தேதி தீபன்ராஜ், அந்தப் பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சனிக்கிழமை இரவு அந்தப் பெண் கொடுத்த புகாரின்பேரில், புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT