புதுக்கோட்டை

தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற நிா்வாகிகள் தோ்வு

25th Oct 2021 12:03 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற கிளை நிா்வாகிகள் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை பொன்-புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்விற்கு ஒன்றியத் தலைவா் அ.பே. பழனிச்சாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அழகப்பன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினா்அ. விக்டா் மற்றும் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளா் அ.பெரியதம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இத்தோ்தலில் தோ்தல் ஆணையா்களாக ஜெயராஜ், நாகராஜன் ஆகியோா் பொறுப்பேற்று தோ்தலை நடத்தினா். இத்தோ்தலில் ஒன்றியத் தலைவராக பழனியப்பன், செயலாளராக வ. கிருஷ்ணன், பொருளாளராக ரா.வெள்ளைச்சாமி, துணைத் தலைவராக தனபாக்கியம், துணைச் செயலாளராக சரவணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். பொருளாளா் ரா. வெள்ளைச்சாமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT