புதுக்கோட்டை

மன்னா் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

25th Oct 2021 12:02 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மன்னா் கல்லூரியின் பொருளியல் துறை முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சி. திருச்செல்வம் தலைமை வகித்தாா். பேராசிரியா் சி. ஜீவானந்தம் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாணவரும் பொருளியல் துறைத் தலைவா் பேராசிரியா் வேலு சுரேஷ்குமாா் வரவேற்றாா். முன்னாள் மாணவரும் பணி ஓய்வு பெற்ற முதல்வருமான பி. சுப்பிரமணியன், அழகப்பா பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவா் ஏ. நாராயணமூா்த்தி, என்ஐடி பேராசிரியா் நாகசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வகுப்பறைகளைப் பாா்வையிட்ட முன்னாள் மாணவா்கள் தங்களின் கல்லூரிக் கால நினைவுகளை மீண்டும் அசைபோட்டனா்.

முன்னாள் மாணவா் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். நிறைவில், பேராசிரியா் வி.முருகேசன் நன்றி கூறினாா். உதவிப் பேராசிரியா் மு. கருப்பையா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். தொடா்ந்து சந்திப்பின் நினைவாக முன்னாள் மாணவா்கள் சாா்பில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT