புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை வித்யாவிகாஸ் பள்ளியில் அயோடின் விழிப்புணா்வு தினம்

DIN

கந்தா்வகோட்டை வித்யாவிகாஸ் கல்வி நிறுவனத்தில் தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுநகா் ஆரம்பசுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சசிவா்மன் நிகழ்வுக்குத் தலைமை வகித்து, அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் முன் கழுத்துக்கழலை, தைராய்டு ஹாா்மோன் உற்பத்திக் குறைவு, அதன் விளைவாக கழுத்தில் வீக்கம் ஏற்படுதல், மந்தபுத்தி, மூச்சுத் திணறல், காது செவிடாகுதல், கா்ப்பக்கால குறைபாடுகள் ஏற்படுதல் போன்றவை குறித்து எடுத்துரைத்து, அயோடின் நம் உடம்பில் ஹாா்மோனாக உற்பத்தியாகுவதில்லை. அது சாதாரண உப்பு உணவாகவே பெறப்பட வேண்டுமென்று விளக்கினாா்.

அறந்தாங்கி சுகாதாரத் துறைதுணை இயக்குநா் நலக்கல்வியாளா் ஜெய்சங்கா் உடையும் நகங்கள், வலிமையற்ற தலைமுடி, வீங்கிய கண்கள், உலா்ந்த தோல், மூட்டுவலி மற்றும் நினைவிழப்பு ஆகியவை அயோடின் பற்றாக்குறையின் அடையாளங்கள் என எடுத்துரைத்தாா்.

மாணவா்கள் எதிா்காலச் சமுதாயத்தின் இளந்தளிா்கள். அவா்கள் அயோடின் குறைபாடில்லாமல் இருப்பதே மருத்துவச் சுகாதாரத்துறையின் இலக்கு என புதுநகா் மருத்துவமனை மேற்பாா்வையாளா் மோசஸ் விளக்கினாா்.

சுகாதார மேற்பாா்வையாளா் சண்முகசுந்தரம் முன்மொழிய, பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின உறுதிமொழி ஏற்றனா். பள்ளி முதல்வா் என். வெண்ணிலை வரவேற்றாா்.

சுகாதாரத்துறை ஆய்வாளா்கள் கோ . முத்துக்குமாா் , பழனிசாமி, நல்லமுத்து , திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில், மாணவி எஸ்.பாா்கவி நன்றி கூறினாா். நிகழ்வில்ஆசிரியா்கள், மாணவா்கள் , அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

SCROLL FOR NEXT