புதுக்கோட்டை

புதுகையில் 67 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு

23rd Oct 2021 11:54 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை பாலன் நகரில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட 67 வீடுகளை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளை சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி சனிக்கிழமை வழங்கினாா்.

புதுகை பாலன்நகரில் பகுதி-1 திட்டத்தில் ரூ. 16.60 கோடியில் 192 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில், முதல் கட்டமாக 67 பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்யும் குலுக்கல் முறை சனிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து மாற்றுத்திறனாளிகளான அந்தப் பயனாளிகளுக்கு உரிய ஆணைகளை அமைச்சா் எஸ். ரகுபதி வழங்கினாா். இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். எஞ்சியுள்ள வீடுகளுக்கான விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் க. நைனாமுகமது ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT