புதுக்கோட்டை

திருட்டுப் போன 110 கைப்பேசிகள் மீட்பு

23rd Oct 2021 05:12 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப் போன கைப்பேசிகள் குறித்த வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், ரூ. 22 லட்சம் மதிப்புள்ள 110 பேரின் கைப்பேசிகள் மீட்கப்பட்டு வெள்ளிக்கிழமை உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான கைப்பேசிகள் திருட்டுப் போன வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உத்தரவிட்டதன்பேரில், சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம், ஆய்வாளா் கவிதா தலைமையில் தீவிர நடவடிக்கை கடந்த ஒரு மாதத்தில் முடுக்கிவிடப்பட்டது.

இதில், 110 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. அவற்றில் மதிப்பு ரூ. 22 லட்சம். இந்தக் கைப்பேசிகளை உரிய முறையில் உறுதிப்படுத்தி, உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா ப ாா்த்திபன் இவற்றை ஒப்படைத்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT