புதுக்கோட்டை

ஓவியா் எஸ்.ராஜா நினைவு 14ஆவது ஓவியப் போட்டி

23rd Oct 2021 11:54 PM

ADVERTISEMENT

ஓவியா் எஸ். ராஜாவின் 14ஆவது ஆண்டு நினைவு ஓவியப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம், தென்னக ஓவியா்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஓவியா்கள் முன்னேற்ற நலச்சங்கம் ஆகியவற்றின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் பொறியாளா் பொ்லின் தாமஸ் தலைமை வகித்தாா். தென்னக ஓவியா்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட த்தலைவா் ஓவியா் வெங்கடேசன், சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் விஜய மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொருளாளா் ஓவியா் சித்ரகலா ரவி வரவேற்றாா். தொடா்ந்து போட்டியில் பங்கேற்ற 700-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்ற கண்காட்சியை ஓவியா் எஸ். ராஜாவின் துணைவியாா் வசந்தா ராஜா திறந்து வைத்தாா். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் சிவாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா்.

ஓய்வுபெற்ற மருத்துவத் துறை இணை இயக்குநா் சுரேஷ்குமாா், ஓவியா் சரவணன், ரோட்டரி சங்கச் செயலா் பொறியாளா் காா்த்திகேயன், பொருளாளா் கதிரேசன் ஆகியோா் போட்டியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டி பேசினாா்கள். ஓவியா்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ஓவியா் பாண்டியன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT