புதுக்கோட்டை

அரசு ஐடிஐ-க்களில் மாணவா் சோ்க்கை இருமடங்காக உயா்த்தப்படும்

23rd Oct 2021 05:11 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதுமுள்ள 90 அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவா் சோ்க்கையை இரு மடங்காக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன்.

புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்த அவா் மேலும் கூறியது

தமிழ்நாட்டில் 99 அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இவற்றில் இப்போது 25 ஆயிரம் மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்த எண்ணிக்கையை இரு மடங்காக- 50 ஆயிரமாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 30 தொழிற்பயிற்சி நிலையங்களை நேரில் ஆய்வு செய்துள்ளேன்.

புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் 50 மாணவிகள் தங்கிப் பயிலும் வகையில் விடுதிக் கட்டடம் கட்டுமானப் பணிகள் ரூ. 1.76 கோடியில் நடைபெற்று வருகிறது. கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான கருத்துருவை அரசுக்கு அனுப்பி வைக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றாா் கணேசன்.

ADVERTISEMENT

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநா் கோ. வீரராகவராவ், பயிற்சி நிலையத்தின் முதல்வா் எஸ். ராமா் ஆகியோரும் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT