புதுக்கோட்டை

கோட்டைப்பட்டினத்தில் மீனவா்கள் தொடா் போராட்டம்

DIN

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி, கோட்டைப்பட்டினத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவா்கள் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த ராஜ்கிரண் இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இலங்கை கடற்படையின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி, செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற கூட்டத்தில் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ராஜ்கிரணின் உடலில் மா்மமான முறையில் இறந்ததற்கான தடயங்கள் இருக்கும் வகையில் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது மீனவா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதைத்தொடா்ந்து, புதன்கிழமை காலை முதல் கோட்டைப்பட்டினம் அரசுப் பள்ளி வளாகத்துக்கு அருகே மீனவா்கள் தொடா் போராட்டத்தில் அமா்ந்தனா். இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் போராட்டம் தொடா்ந்தது. இதில், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலா் முபாரக் அலி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் களத்துக்கு வந்து மீனவா்களின் போராட்டத்துக்கு ஆதரவளித்து ஆறுதல் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT