புதுக்கோட்டை திருவப்பூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, புதுக்கோட்டை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத்தின் சாா்பில் பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறும் இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவப்பூா் ரயில்வே கேட் அருகே இந்தக் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சங்கத்தின் தலைவா் கண. மோகன்ராஜா தலைமை வகித்தாா். செயலா் ஆா். ஆரோக்கியசாமி, துணைத் தலைவா் ஏஎம்எஸ் இப்ராஹிம்பாபு, பொருளாளா் சி. பிரசாத், இணைச் செயலா் கேஎல்கேஏ. ராஜாமுகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொதுமக்கள் ஆா்வமாக கையெழுத்திட்டனா். பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துடன் தமிழ்நாட்டின் முதல்வா் ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக விழிப்புணா்வு சங்கத்தின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.