புதுக்கோட்டை

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட 43 இடங்களில் சோதனை

18th Oct 2021 08:24 AM

ADVERTISEMENT

வருமானத்துக்கு அதிகமாக ரூ 27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது குறித்த விவரம்: தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  இதில் விஜயபாஸ்கர் தன் பெயரிலும், தன் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்களை வாங்கி வைத்திருப்பதும், அந்த சொத்துக்கள் முறையான வருவாயில் வாங்கப்படாமல் பிற வழிகளில் வாங்கப்பட்டிருப்பதும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தெரிய வந்தது. 

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விஜயபாஸ்கர் மீதும் அவர் மனைவி ரம்யா மீதும் சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்குக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் திரட்டும் வகையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சென்னையில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது குடும்ப வீடு உள்ளிட்ட 43 இடங்களில் திங்கட்கிழமை காலை ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையை தொடங்கினர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க- பெட்ரோல், டீசல் விலை: விமான எரிபொருளைவிட 30% அதிகம்

இச்சோதனை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சோதனை அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே சொத்துக்குவிப்பு வழக்கு, ஊழல் வழக்கு என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் மீது இதுபோன்ற நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT