புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் 29 இடங்களில் சோதனை

18th Oct 2021 08:40 AM

ADVERTISEMENT

முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் வீடு, நண்பர்களின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் என மொத்தம் 29 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

இலுப்பூரிலுள்ள விஜயபாஸ்கரின் வீடு, குடும்ப நண்பர்களான சுப்பையா, குபேந்திரன், பாண்டியன் ஆகியோரின் வீடுகள், திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரி, இலுப்பூரிலுள்ள தங்கும்விடுதி, கல்வி நிறுனங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க- நிலக்கரி பற்றாக்குறை - எரியும் மின்பிரச்னை!

வருமானத்துக்கு அதிகமாக ரூ 27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Tags : vijayabaskar ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT