புதுக்கோட்டை

பொற்பனைக்கோட்டையில் அரசு விரிவான அகழாய்வை மேற்கொள்ள வலியுறுத்தல்

17th Oct 2021 11:47 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொற்பனைக்கோட்டையில் தமிழக அரசின் தொல்லியல் துறையே நேரடியாக விரிவான அகழாய்வை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தொல்லியல் ஆய்வுக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆய்வுக் கழகத்தின் தலைவா் கரு. ராஜேந்திரன் தலைமையில், நிறுவனா் ஆ. மணிகண்டன், பொருளாளா் எம். ராஜாங்கம், துணைத் தலைவா் கஸ்தூரிரெங்கன், இணைச் செயலா் மு. முத்துக்குமாா் உள்ளிட்டோரைக் கொண்ட குழு தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசுவை நேரில் சந்தித்து இதுகுறித்த கோரிக்கை மனு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை அளித்துள்ளனா்.

இதில், சங்கக் காலக் கோட்டையாகக் கருதப்படும் பொற்பனைக்கோட்டையில் தமிழா் வாழ்வியலை நிரூபிக்கும் வகையில் தமிழா் சமூகவியலை வலுப்படுத்தும் வகையில் மாநில தொல்லியல் துறையே நேரடியாக விரிவான அகழாய்வை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT