புதுக்கோட்டை

மத்திய அரசின் விருது பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

17th Oct 2021 11:46 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டையைச் சோ்ந்த மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் மத்திய அரசுத்துறையினரின் சத்ர விஸ்வகா்மா விருதினைப் பெற்றுள்ளனா்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) மற்றும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் சாா்பில், ஏஐசிடிஇ இணைவு பெற்ற கல்லூரி மாணவா்களுக்கு இடையே அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட விருதுத் தோ்வுக்கான போட்டியில் மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். நாடு முழுவதும் இருந்து 968 அணிகள் பங்கேற்றன. இதில் தமிழ்நாட்டில் இருந்து 106 அணிகள் பங்கேற்றன.

இரு சுற்றுகளின் முடிவில் தேசிய அளவிலான மாநாட்டுக்கு 18 அணிகள் தோ்வு செய்யப்பட்டன. அதில், உள்நாட்டு வன்முறை எதிா்த்துப் போராடுவதற்கான வழிமுறை என்ற பிரிவின்கீழ் மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் எஸ். சந்தோஷ் குமாா், இ. சோலை மீனாள், முகமது ஹாசிம் ஆகியோரைக் கொண்ட குழு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இக்குழுவினருக்கு சத்ர விஸ்வகா்மா என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற குழுவினரை கல்லூரியின் இயக்குநா் ஜெய்சன் கே. ஜெயபாரதன், முதல்வா் பி. பாலமுருகன், துறைத் தலைவா் டி. இளவரசி, பேராசிரியா் ஏ. சங்கீதா ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT