புதுக்கோட்டை

விராலிமலையில் அதிமுக பொன்விழா

17th Oct 2021 11:48 PM

ADVERTISEMENT

விராலிமலை காமராஜா் நகரில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தொடா்ந்து சோதனைச் சாவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியச்  செயலா் சுப்பையா அதிமுக கொடியை ஏற்றிவைத்து மா, பலா, பூவரசம் உள்ளிட்ட பல்வேறு வகையான 50 மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்கினாா். தொடா்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் நடைபெற்றது.

விழாவில், மாவட்டக் கவுன்சிலா் ஆா்.கே.சிவசாமி, ஜெ. பேரவை ரெ.கிருஷ்ணன் உள்ளிட்ட திரளான அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT