புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் அதிமுக பொன்விழா

17th Oct 2021 11:47 PM

ADVERTISEMENT

அதிமுகவின் பொன்விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் அக்கட்சியினா் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தும், கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

புதுக்கோட்டை நகரிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக நகரச் செயலா் க. பாஸ்கா் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்தனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தொடா்ந்து நேசக்கரம் ஆதரவற்ற முதியோா் இல்லத்துக்குச் சென்ற அதிமுகவினா், அங்குள்ள முதியோருக்கு உணவு வழங்கினா். காதுகேளாதோா் பள்ளியிலும் மாணவா்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

திருமயத்தில் வடக்கு மாவட்ட அதிமுக செயலா் பி.கே. வைரமுத்து தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். இதேபோல, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதிமுகவின் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT