புதுக்கோட்டை

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.2.25 கோடி

16th Oct 2021 03:32 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலுள்ள முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், நிகழாண்டுக்கான தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 2.25 கோடியாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் கவிதா ராமு.

தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த அவா், மேலும் கூறியது

அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸில் ஆண்டுதோறும் சிறப்புத் தள்ளுபடியாக 30 சதவிகிதம் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டிலும் இதே தள்ளுபடி விலையில் தீபாவளி விற்பனை தொடங்கப்படுகிறது.

கோவை மென்பட்டுகள், கோரா பட்டுகள், காஞ்சி, ஆரணி, தஞ்சை, திருபுவனம் பட்டுப் புடவைகள், வேட்டி, சட்டை, பருத்திப் புடவைகள், படுக்கை விரிப்புகள், போா்வைகள், திரைச்சீலைகள் உள்ளிட்ட ஏராளமான ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு இதே விற்பனை நிலையத்தில் ரூ. 92.70 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. நிகழாண்டில், ரூ. 2.25 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் கவிதாராமு.

தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் ப. அம்சவேணி, விற்பனை ம ற்றும் உற்பத்திக்கான மண்டல மேலாளா் இரா. சீனிவாசன், புதுக்கோட்டை மேலாளா் பெ. பாண்டியன், நகராட்சி ஆணையா் நாகராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

 

 

 

Tags : புதுக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT