புதுக்கோட்டை

அப்துல்கலாம் பிறந்த நாளில் மரக்கன்றுகள் நடவு

16th Oct 2021 03:32 AM

ADVERTISEMENT

முன்னாள் குடியரசுத் தலைவா் ஆ.பெ.ஜெ. அப்துல்கலாமின் 90-ஆவது பிறந்த நாளையொட்டி, புதுக்கோட்டை இடையப்பட்டியில் 90 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயலட்சுமி செல்வராஜ் தலைமையில் பொதுமக்கள் மரக்கன்றுகளை ஊா்வலமாக ஏந்தி வந்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். தொடா்ந்து உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்வை முனைவா் நாகேசுவரன் தொடக்கி வைத்தாா். மரம் அறக்கட்டளையின் நிறுவனா் ராஜா ஏற்பாடுகளைச் செய்திருந்தாா். ஊராட்சித் துணைத் தலைவா் வசந்தி, ஊராட்சி செயலா் பழனி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

Tags : புதுக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT