புதுக்கோட்டை

மண்டையூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

9th Oct 2021 12:33 AM

ADVERTISEMENT

விராலிமலை கிழக்கு ஒன்றியம், மண்டையூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன், விராலிமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ம.சத்தியசீலன், மாவட்ட இலக்கிய அணித் துணை அமைப்பாளா் தென்னலூா் எம். பழனியப்பன் ஆகியோா் நிகழ்வில் பங்கேற்று, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தனா்.

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று , அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறக்க ஏற்பாடு செய்த கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சத்தியசீலன் உள்ளிட்டோருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT