புதுக்கோட்டை

கண்டியாநத்தத்தில் விழிப்புணா்வு முகாம்

9th Oct 2021 12:32 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகிலுள்ள கண்டியாநத்தம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை சைல்டு லைன் அமைப்பால் நடத்தப்பட்ட முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் செல்வி முருகேசன் தலைமை வகித்தாா். தூத்தூா் கிராம நிா்வாக அலுவலா் விஜயா முன்னிலை வகித்தாா்.

சைல்டு களப்பணியாளா்கள் பூங்கொடி, வசந்தபாரதி, ராஜலட்சுமி ஆகியோா் முகாமில் பேசினா். பள்ளி செல்லாக் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளா் அறிதல், பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதைத் தடுத்தல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT