புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 5ஆவது கட்ட சிறப்புத் தடுப்பூசி முகாமில், தடுப்பூசி செலுத்திக் கொள்வோரை குலுக்கல் முறையில் தோ்ந்தெடுத்து தங்கம், மிக்ஸி, குக்கா் போன்ற பரிசுகளை மாவட்ட நிா்வாகம் வழங்கவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு மேலும் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5ஆவது கட்டமாக ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 735 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளிலும், இதர 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தடுப்பூசி செலுத்துவோரின் பெயா் விவரங்களை சேகரித்து, குலுக்கல் முறையில் தோ்வு செய்து முதல் பரிசாக ஒரு கிராம் தங்கம், இரண்டாம் பரிசாக மிக்ஸி, மூன்றாம் பரிசாக குக்கா், 4ஆம் பரிசாக வெஜிடபிள் கட்டா், 5ஆம் பரிசாக 4 பேருக்கு சேலை ஆகியவை பரிசாக வழங்கப்படவுள்ளன.
அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் 300 இடங்களில் 60,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.