புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை காவல்துறையைக் கண்டித்து நடைபெற இருந்த ஆா்ப்பாட்டம் ரத்து

9th Oct 2021 11:47 PM

ADVERTISEMENT

புகாா் வாங்க மறுத்த கந்தா்வகோட்டை காவல்துறையைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

கந்தா்வகோட்டை அருகே உள்ள மின்னாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் (50) என்பவா் தகராறு தொடா்பாக கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கச் சென்றபோது காவல் ஆய்வாளா் புகாரை வாங்க மறுத்து அவரைத் திருப்பி அனுப்பியுள்ளாா். இதுகுறித்து செல்வராஜ் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கூறியுள்ளாா். இதையடுத்து, கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் காவல் துறையைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்யக் கூடினா். தகவலறிந்த துணை காவல் கண்காணிப்பாளா் லில்லிகிரேஸ் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் ஆா்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாகப் போராட்டக் குழுவினா் அறிவித்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT