புதுக்கோட்டை

புதுகையில் கிராம சபைக் கூட்டம்

3rd Oct 2021 12:42 AM

ADVERTISEMENT

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகள் தவிா்த்த அனைத்து கிராமங்களிலும் கிராமசபைக் கூட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

அரிமளம் ஊராட்சி ஒன்றியம் கடியாப்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவி உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டாா். மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், ஒன்றியக் குழுத் தலைவா் மேகலா முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவி சாந்தி வளா்மதி தலைமை வகித்தாா். மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ரம்யா தேவி, ஒன்றியக் குழுத் தலைவி வள்ளியம்மை தங்கமணி, வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை ஒன்றியம் முள்ளூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் ஆதிஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கலந்து கொண்டாா். வேளாண் இணை இயக்குநா் சிவகுமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி, மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT