காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்கு சனிக்கிழமை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கல்லூரித் தலைவா் ஆா்எம்வீ. கதிரேசன் தலைமை வகித்தாா். தாளாளா் பி. கருப்பையா, முதல்வா் ஆா். புகழேந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.