புதுக்கோட்டை

காந்தி ஜெயந்தி - விடுமுறை அளிக்காத 27 நிறுவனங்கள் மீது வழக்கு

3rd Oct 2021 12:38 AM

ADVERTISEMENT

தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தியன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காமல் பணி அளித்த தனியாா் நிறுவனங்கள் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ. தங்கராசு கூறியது: தேசிய விடுமுறை தினங்களில் அனைத்து தொழில் நிறுவனங்களும் கட்டாயம் தொழிலாளா்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும். அல்லது முறைப்படி அனுமதி பெற்று, தொழிலகங்களை நடத்தினாலும் மாற்று விடுமுறையும் வழங்க வேண்டும்.

இந்நிலையில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அல்லது அனுமதி பெற்று மாற்று விடுமுறையும் அளிக்காத தொழிலகங்கள் குறித்து சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்யப்பட்டது. திருச்சி சரகத்தில் 122 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் விதிகளை மீறிய நிறுவனங்கள் மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT