புதுக்கோட்டை

சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியிடம் விசாரணை

DIN

புதுக்கோட்டை அருகே கீரனூரில் நவல்பட்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் எஸ். பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய எதிரியை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்தவா் எஸ். பூமிநாதன் (50). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் இருந்தபோது, ஆடு திருடா்களை விரட்டி வந்தபோது, கீரனூா் அருகே பள்ளத்துப்பட்டியில் வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவத்தில், தஞ்சாவூா் மாவட்டம் கல்லணை அருகேயுள்ள தோகூா் கிராமத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் மணிகண்டன் (19) மற்றும் இரு பள்ளிச் சிறாா்களும் கைது செய்யப்பட்டனா். இதில் திருமயம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸாா், நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனா். இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு சிறையில் இருந்து மணிகண்டனை வெளியே எடுத்து வந்து காவல்நிலையத்தில் வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

கொலை வழக்கின் விசாரணை அதிகாரியும், கீரனூா் காவல் நிலைய ஆய்வாளருமான சுப்பிரமணியன் உள்ளிட்ட போலீஸாா் விசாரணையை நடத்தினா். விசாரணையின் நிறைவில் மணிகண்டன் வெள்ளிக்கிழமை நள்ளிரவே நீதித்துறை நடுவா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு, மீண்டும் திருமயம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT