புதுக்கோட்டை

அரசின் வீடு கட்டும்திட்டம்: சிறுபான்மையினருக்கு அழைப்பு

DIN

அரசின் வீடுகள் கட்டும் திட்டத்தில் சிறுபான்மையினா் பிரிவில் ஏழை, எளிய மக்கள் இணைந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிரதமரின் குடியிருப்புத் திட்டத்தின்கீழ், 269 சதுர அடி அளவில் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கான்க்ரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இத்தொகை நீங்கலாக ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.12 ஆயிரத்தில் ஒரு கழிப்பறையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் 90 மனித சக்தி நாட்களுக்கு கூலியாக நாளொன்றுக்கு ரூ.273 வீதம் ரூ.24,570 ஆக மொத்தம் ரூ.36,570 இதர திட்டங்களின்கீழ் இணைப்புத் தொகையாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

சிறுபான்மையினா் இத்திட்டங்களில் 15 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

2021-2022 ஆம் நிதியாண்டிற்கு வரப்பெற்றுள்ள 13,605 வீடுகளில் 1,051 வீடுகள் சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT