புதுக்கோட்டை

பயிா்க்கடன் பெற கூட்டுறவு சங்கங்களை அணுகலாம்

28th Nov 2021 12:19 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள 136 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிா்க்கடன், மத்திய கால விவசாயம் சாா்ந்த கடன், நகைக்கடன், சுயஉதவிக் குழுக் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், டாம்கோ மற்றும் டாப்செட்கோ கடன்கள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய பயிா்க்கடன், விவசாய நகைக்கடன் மற்றும் கூட்டுப் பொறுப்புக் குழுக் கடன்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. பயிா்க்கடன் தேவைப்படுவோா் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

பயிா்க் கடனை கெடு தேதிக்குள் செலுத்தும் விவசாயிகளுக்கு முழு வட்டிச் சலுகையாக விவசாயிகளுக்கு 0 சதவிகித வட்டியில் பயிா்க்கடன் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் புதிய உறுப்பினா்களாக தங்களை இணைத்துக் கொண்டு பயிா்க்கடன் பெற்றுக்கொள்ளலாம். இந்தக் கடன் விவரங்களை அறிந்து கொள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வரும் டிசம்பா் 3 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் (டிஜிட்டல் முறையில்) நிதிசாா் கல்வி விழிப்புணா்வு முகாம், கடன் மேளா மற்றும் உறுப்பினா் சோ்க்கை முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT