புதுக்கோட்டை

தேசிய கல்வி உதவித் தொகைக்கு புதுப்பிக்க நாளை கடைசிநாள்

28th Nov 2021 11:41 PM

ADVERTISEMENT

நடப்பாண்டில் புதுப்பித்தலுக்குத் தகுதியான மாணவா்கள் அனைவரும் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் புதுப்பித்து அதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமானச் சான்று சமா்ப்பிக்க அவசியமில்லை. ஆதாா் விவரங்களில் பெயா் மாற்றம் காரணமாக புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவா்களும் தற்போது விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டடத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT