புதுக்கோட்டை

நவ. 28 ஆண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சை

26th Nov 2021 04:10 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நவ. 28ஆம் தேதி முதல் டிச. 4 வரை ஆண்களுக்கான நவீன வாசக்டமி (குடும்ப நல அறுவைச் சிகிச்சை) அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடைபெறவுள்ளது.

பெண்களுக்கு செய்யப்படும் குடும்பநல அறுவைச் சிகிச்சையைக் காட்டிலும் எளிதானது. தையல் இருக்காது. மயக்கமருந்து போடப்படாது. 2 மணி நேரத்தில் இயல்பான வேலைகளைச் செய்யலாம். வீடு திரும்பலாம்.

இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்வோருக்கு ஈட்டுத் தொகையாக ரூ. 1100, ஊக்கத் தொகையாக ரூ. 200 வழங்கப்படுகிறது என ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.

Tags : புதுக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT