புதுக்கோட்டை

தொழில்நுட்பக்குழு கூட்டம்: விவசாயிகள் சங்கம் கண்டனம்

26th Nov 2021 04:10 AM

ADVERTISEMENT

 புதுகையில் நடைபெற்ற மாவட்ட தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க இந்திய கம்யூ. கட்சி சாா்பு அகில இந்திய விவசாயிகள் சங்கத்துக்கு அழைப்புவிடுக்கவில்லை என அதன் தேசியக் குழு உறுப்பினா் மு. மாதவன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் 2021- 2022 ஆண்டுக்கு மாவட்டத்தில் பயிரிடப்படும் பயிா்களுக்கான கடன் அளவு, கால்நடை மற்றும் மீன் வளா்ப்பு நடைமுறை மூலதனக் கடன் அளவு நிா்ணயம் பற்றி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் தலைமையில், வேளாண் இணை இயக்குநா், நபாா்டு மேலாளா், கோத்தாரி சா்க்கரை ஆலை கரும்பு மேலாளா், வங்கியாளா்கள் மற்றும் பல்வேறு விவசாய சங்கத் தலைவா்களும் கலந்து கொண்டுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலுவாக முன்வைத்து, போராடி வரும் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு விவசாய சங்கத்துக்கு அழைப்புவிடுக்கவில்லை. எங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது சரியல்ல; இது சரியான நடைமுறையாக இருக்காது. கூட்டத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறாது. தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டால் உரிமைக்காக போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : புதுக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT