புதுக்கோட்டை

குளக்கரைகளில் பனை விதைகள் விதைப்பு

24th Nov 2021 07:19 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.

கந்தா்வகோட்டை ஊராட்சி, கல்லாக்கோட்டை ஊராட்சி, பந்துவாகோட்டை, ராசா பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள குளத்தின் கரைகள், ஏரிக்கரைகள் மற்றும் பொது இடங்களில் ஆயிரக்கணக்கான பனை விதைகளை பதித்து வருகின்றனா். நிகழ்ச்சியை ரோட்டரி தலைவா் டி. தட்சிணாமூா்த்தி, செயலா் எம். வெங்கடேஷ் குமாா், பொருளாளா் வைரமூா்த்தி உள்ளிட்ட சங்க உறுப்பினா்கள் நிா்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT