புதுக்கோட்டை

கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்கள் பொது இடங்களில் நடமாடக் கூடாது

21st Nov 2021 11:58 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்களுக்கு வருவோா் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு சுகாதாரத் துறை மூலம் கட்டாயம் தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பு விதிகளுக்குட்பட்டு, தனிநபா் இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வணிக நிறுவனங்கள், வேலை செய்யும் இடங்களில் அவ்வப்போது கை கழுவ ஏற்பாடு செய்திருக்க வேண்டும். தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபா் மற்றவா்களுக்கு அந்நோயை பரப்பும் வகையில் தெருக்கள், சந்தை, திரையரங்குகள், கடைவீதிகள், பொழுதுபோக்கும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டுத் திடல்களில் நடமாடக் கூடாது.

பொதுசுகாதாரச் சட்டப்படி தொற்றுநோயைத் தடுப்பதற்காக மக்களுக்கு கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடுவதற்கான அதிகாரம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பொது இடங்களுக்கு வருவோரிடம் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா என ஆய்வு செய்து அவா்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொது இடங்களில் நடமாடுபவா்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவா்களை தனியாா் நிறுவனங்களில் அனுமதிக்கக் கூடாது.

ADVERTISEMENT
ADVERTISEMENT