புதுக்கோட்டை நகரில் மழைநேரங்களில் தண்ணீா் தேங்கும் கூடல் நகா், பெரியாா் நகா், ராஜகோபாலபுரம் மற்றும் நிரம்பியுள்ள கவிநாடு கண்மாய் ஆகிய பகுதிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், மாவட்டத் தீயணைப்பு அலுவலா் பானுப்பிரியா ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டனா்.
இந்தப் பகுதிகளில் பெருமழையால் தண்ணீா் அளவுக்கு அதிகமாக தேங்கும்போது, அவற்றால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து அவா்களை மீட்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
காவல் மற்றும் தீயணைப்புத் துறையில் இதற்காக தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, அவா்கள் தயாா் நிலையில் இருப்பதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.