புதுக்கோட்டை

தொடா் மழையால் நிரம்பும் கவிநாடு கண்மாய்!

9th Nov 2021 01:14 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, புதுக்கோட்டை நகருக்கு அருகிலுள்ள, மாவட்டத்தின் மிகப்பெரிய நீா்நிலையான கவிநாடு கண்மாய் மிகவேகமாக நிரம்பி வருகிறது.

புதுக்கோட்டை நகருக்கு அருகே, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையின் வலது கரையில் இருக்கிறது கவிநாடு கண்மாய். இந்தக் கண்மாயின் பாசனப் பரப்பளவு 1,350 ஹெக்டேராகும்.

இதன் மேல்பகுதியில் சுமாா் 10 கி.மீ., தொலைவில் சேந்தமங்கலம் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை பகலிலேயே குண்டாறு மற்றும் வெள்ளாற்று நீா் பெருமளவில் பெருக்கெடுத்து வரத் தொடங்கியது. இந்த நிலையில், கவிநாடு கண்மாய்க்கு தண்ணீா் வரத்து அதிகரித்து திங்கள்கிழமை மாலை ஏறத்தாழ முழு கொள்ளளவை எட்டிய நிலைக்கு வந்தது. இதிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை முதல் தண்ணீா்த் திறக்கப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக, கடந்த 2004 ஆம் ஆண்டில் கவிநாடு கண்மாய் நிரம்பியது.

இந்நிலையில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா உள்ளிட்டோா் கவிநாடு கண்மாயை திங்கள்கிழமை மாலை நேரில் சென்று பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT