புதுக்கோட்டை

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் வீடுகள் இடிக்கப்படும் அச்சம்

5th Nov 2021 11:26 PM

ADVERTISEMENT

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் தங்களின் வீடுகள் இடிக்கப்பட உள்ளதாகக் கூறி, ராஜகுளத்தாா் மற்றும் நரங்கியன்பட்டி கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

புதுக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த செம்பாட்டூா் ஊராட்சி நரங்கியன்பட்டி, ராஜகுளத்தூா் கிராமங்களைச் சோ்ந்த குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பகுதி வீடுகளை இடிக்கும் வகையில், காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தின் வாய்க்கால் அமைக்க அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், பெரும்பாலான வீடுகளை இடித்துவிட்டால் வாழவே முடியாத நிலை ஏற்படும் என்பதாகக் கூறி, கடந்த சில நாள்களுக்கு முன்பே முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைத்த பொதுமக்கள், மாவட்ட அமைச்சரான எஸ். ரகுபதியிடம் மனுக்களை அளித்தனா்.

இதன் தொடா்ச்சியாக நரங்கியன்பட்டி கிராமத்தில் இரு கிராமத்தைச் சோ்ந்த மக்கள் வெள்ளிக்கிழமை ஒன்றுகூடி, தொடா் போராட்டங்களை நடத்த முடிவு செய்தனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை நேரில் சென்று இடங்களைப் பாா்வையிட்டனா்.

 

Tags : புதுக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT