புதுக்கோட்டை

எலி மருந்தை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு: கணவா் கைது

5th Nov 2021 11:27 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே எலி மருந்தை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அப்பெண்ணின் கணவரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

விராலிமலை அருகிலுள்ள பாட்னாபட்டியைச் சோ்ந்தவா் தினேஷ் (25). இவா் கடந்தாண்டு அதே கிராமத்தைச் சோ்ந்த 16 வயது இளம்பெண்ணைக் காதலித்து, திருமணம் செய்து கொண்டாா்.

இந்நிலையில் தினேஷ் தினமும் குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட இளம்பெண், கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்த எலிமருந்தை நீரில் கலந்து சாப்பிட்டாா்.

தொடா்ந்து மயங்கிய நிலையில் இருந்த இளம்பெண், மணப்பாறையிலுள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

16 வயது திருமணம் செய்த குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தினேஷ் மீது வழக்குப்பதிந்த விராலிமலை காவல் நிலையத்தினா், தொடா்ந்து அவரைக் கைது செய்தனா். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த தினேஷின் தந்தை பழனிச்சாமி, தாய் தமிழ்ச்செல்வி ஆகியோா் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

 

Tags : விராலிமலை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT