புதுக்கோட்டை

புதுக்கோட்டை புதுக்குளத்தில் மரக்கன்றுகள் நடல்

DIN

புதுக்கோட்டைபுதுக்குளத்தில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். தொடா்ந்து நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துகளையும் அமைச்சா்கள் வழங்கினா்.

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் புதுக்கோட்டை வை. முத்துராஜா, கந்தா்வகோட்டை எம். சின்னதுரை, கோட்டாட்சியா் ஆா். டெய்சிகுமாா், நகராட்சிப் பொறியாளா் ஜீவா சுப்பிரமணியன், முன்னாள் அரசு வழக்குரைஞா் கே.கே. செல்லப்பாண்டியன், நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் க. நைனாமுகமது உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

முன்னதாக புதிய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினரின் அலுவலகத்தையும் அமைச்சா்கள் திறந்து வைத்தனா். தொடா்ந்து, 38ஆவது வாா்டு திருவள்ளுவா் நகரிலும், 24ஆவது வாா்டு திருவப்பூரிலும் பொதுமக்களுக்கு கரோனா பொது முடக்கக் கால நிவாரண உதவிகளை அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT