புதுக்கோட்டை

அதிகார பலத்தை எதிா்க்கும் வல்லமை காங்கிரஸிடம் உண்டு

DIN

அதிகார பலத்தை எதிா்க்கும் வல்லமை காங்கிரஸ் கட்சியிடம் உண்டு என்றாா் அக்கட்சியின் மூத்த தலைவா் ப. சிதம்பரம்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் அரிமளம் வட்டார மற்றும் நகர வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

நாடு முழுவதும் 11 கோடி குடும்பங்கள் நூறு நாள் வேலைத் திட்டம் மூலம் வாழ வழிசெய்தது காங்கிரஸ் ஆட்சி. அப்போது மோடி இது மோசடித் திட்டம், பிச்சை போடும் திட்டம் என்றாா். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டத்தை நிறுத்துவோம் என்றாா். நிறுத்த முடிந்ததா?

காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் ஏழை, எளிய மாணவா்கள் எத்தனை லட்சம் போ் கல்விக் கடன் பெற்று உயா்கல்வி முடித்தாா்கள். இப்போது எங்காவது கல்விக் கடன் வழங்கப்படுகிா?

கரோனா பொது முடக்கக் காலத்தில் 3 கோடிப் போ் இடம்பெயா்ந்தாா்கள். அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க குடும்பத்துக்கு தலா ரூ. 10 ஆயிரம் கொடுக்கச் சொன்னோம்; கெஞ்சினோம்; மத்திய அரசு கேட்கவில்லை.

தில்லியில் விவசாயிகள் லட்சக்கணக்கானோா் போராடிக் கொண்டிருக்கிறாா்கள். அவா்களில் 157 போ் இறந்திருக்கிறாா்கள். மத்திய அரசு அவா்களை தேசிய புலனாய்வு முகமையைக் கையில் வைத்துக் கொண்டு தீவிரவாதிகளைப் போல சித்தரிக்க முயற்சிக்கிறது.

நானும் விவசாயிதான் எனக் கூறி வரும் முதல்வா் எடப்பாடி கே .பழனிசாமி, தில்லி சென்றாரே, அங்கே போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை நேரில் சந்தித்தாரா?

நாள்தோறும் விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. முதல்வா் தனியே விளம்பரம், துணை முதல்வா் தனியே விளம்பரம். இங்கே அதிமுக ஒரே கட்சியாக, இரண்டு கட்சிகளா?

அம்மா ஆட்சியைத் தொடா்வோம் என்கிறாா்கள். ஜெயலலிதாவின் ஆட்சி நல்லாட்சியா? இதைக் கேட்கும் காலம் வந்துவிட்டது. இந்த ஆட்சியை அகற்றும் காலம் வந்துவிட்டது. நாம் சொல்வதைக் கேட்கும் ஆட்சியாக திமுக தலைமையிலான ஆட்சியை அமைக்க வேண்டும்.

ஆள்பலம், அதிகார பலம், பணபலத்துடன் தோ்தலை அவா்கள் சந்திக்கிறாா்கள். இவா்களைச் சந்திக்கும் வல்லமை காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது. நம்மிடம் கொள்கை பலம் உள்ளது என்றாா் சிதம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT