புதுக்கோட்டை

புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா

22nd Feb 2021 11:53 AM

ADVERTISEMENT

திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய நடைபெற்ற பூச்சொரிதல் நிகழ்வைத் தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் பூக்கள் மலை போல் குவிந்தன.

புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விடிய விடிய மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பூத்தட்டுகளை எடுத்து வந்தனர். 

ADVERTISEMENT

திங்கள்கிழமை காலை கோயில் கருவறை மற்றும் வளாகத்தில் மலை போல் குவிந்திருந்த பூக்கள் பிரிக்கப்பட்டன. வரும் 28ஆம் தேதி பிற்பகலில் புரவி எடுத்தலும் மாலை கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலும் நடைபெறுகின்றன. தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறவுள்ளது.

Tags : pudhukottai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT