புதுக்கோட்டை

துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்படத் தடை: புதுக்கோட்டை ஆட்சியர் உத்தரவு

30th Dec 2021 12:01 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வியாழக்கிழமை தடை விதித்துள்ளார்.

புதுக்கோட்டை கீரனூர் சரக காவல் எல்லைக்குள்பட்ட பசுமலைப்பட்டி என்ற இடத்தில் தமிழ்நாடு காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைந்துள்ளது.

இந்த பயிற்சி மையத்தில், இன்று காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி(11) என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.

இதையும் படிக்க | புதுக்கோட்டையில் குண்டு பாய்ந்து சிறுவன் காயம்: மக்கள் சாலை மறியல்

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பயிற்சி மையத்தை தடை விதிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

இந்நிலையில், துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட தற்காலிக தடை விதிப்பதாகவும் குழு அமைத்து ஆய்வு செய்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

Tags : pudukottai
ADVERTISEMENT
ADVERTISEMENT