புதுக்கோட்டை

மீட்கப்பட்ட மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

30th Dec 2021 07:19 AM

ADVERTISEMENT

விராலிமலை அருகே சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த மயில் மீட்கப்பட்டு செவ்வாய்க்கிழமை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விராலிமலை - திருச்சி நான்கு வழிச் சாலை குறிச்சிப்பட்டி பிரிவு அருகே உள்ள தனியாா் தோட்டத்தில் ஆண்டியப்பன் - மாரி தம்பதியினா் தங்கி வேலை பாா்த்துவருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஆண் மயில் அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதி காயமடைந்து தோட்டத்துக்குள் வந்து கிடந்தது. இதையடுத்து, அங்கிருந்த பணியாளா்கள் உணவு, குடிநீா் அளித்து ஆசுவாசப்படுத்தினா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த விராலிமலை வனவா் கருப்பையாவிடம் மயிலை ஒப்படைத்தனா். உரிய சிகிச்சைக்குப் பிறகு வனப்பகுதியில் விடப்படும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT