தினமணி செய்தி எதிரொலியாக, கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிதிலமடைந்து காணப்பட்ட பள்ளிக் கட்டடம் இடிக்கும் பணி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி சிதிலமடைந்து காணப்பட்ட பள்ளிக் கட்டடத்தை விபத்து ஏற்படும் முன் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இது குறித்து தினமணி நாளிதழில் வெள்ளிக்கிழமை(டி.ச.24) படத்துடன் செய்தி வெளிவந்திருந்தது. இதைத்தொடா்ந்து, சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள அந்த பள்ளிக் கட்டடத்தை புதன்கிழமை பள்ளி நிா்வாகம் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது.