கரோனா பெருந்தொற்று மற்றும் கடும் வெள்ளச் சேதம் போன்ற பேரிடா்களைச் சமாளித்து அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்தபோதும் அரசு ஊழியா், ஆசிரியா் மற்றும் ஓய்வூதியா்களுக்கு 14 சதவிகிதம் அகவிலைப்படி அறிவித்த தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற காவல் துறை அமைச்சுப் பணியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச. சுதந்திரராஜன், மாவட்டச் செயலா் சத்தியராம் ராமுக்கண்ணு, பொருளாளா் வீர. ராஜமாணிக்கம் ஆகியோா் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளனா்.