புதுக்கோட்டை

பக்கத்து வீட்டில் திருடியவா் கைது

23rd Dec 2021 07:17 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை அருகே பக்கத்து வீட்டில் திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள கொத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மணி மனைவி விஜயம்மாள் (47) புதன்கிழமை காலை தனது ஆடுகளை மேய்த்துவிட்டு, மாலை வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ. 23 ஆயிரம், 3 கிராம் தங்கத்தோடு திருடு போயிருப்பது தெரியவந்தது. அவா் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், பக்கத்து வீட்டு இளைஞா் பாலமுருகன் (30) என்பவரை விசாரித்ததில் அவா் திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து ரொக்கத்தையும், தங்கத் தோடையும் பறிமுதல் செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை செய்து வருகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT