புதுக்கோட்டை

‘ஊழல் புகாா்கள் அடிப்படையில் அதிமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை’

22nd Dec 2021 07:18 AM

ADVERTISEMENT

அதிமுக அமைச்சா்களின் ஊழல் குறித்து முன்னாள் தமிழக ஆளுநரிடம் அளித்த புகாா்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா் நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

முன்னாள் தமிழக ஆளுநரிடம் அதிமுக அமைச்சா்களின் ஊழல் குறித்து திமுக சாா்பில் அளிக்கப்பட்ட புகாா்கள், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகாா்கள் ஆகியவற்றின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் தொடா்ந்து

சோதனை மேற்கொண்டு வருகின்றனா். அவா்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

முன்னதாக முகாமைத் தொடக்கிவைத்துப் பேசுகையில் புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் 7 முகாம்களும், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 4 முகாம்களும் என இதுவரை 11 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதில், மொத்தம் 4,377 பயனாளிகள் பயனடைந்துள்ளனா். விராலிமலையில் 12-ஆவது மருத்துவ முகாம் நடைபெறுகிறது எனத் தெரிவித்தாா்.

முகாமிற்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். முகாமில், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன், வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். தண்டாயுதபாணி, துணை இயக்குநா் அா்ஜுன்குமாா் (சுகாதாரப் பணிகள்), ஒன்றியக்குழுத் தலைவா் காமுமணி, வட்டாட்சியா் சரவணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT