புதுக்கோட்டை

புதுகை ராணியாா் பள்ளியில் பள்ளிக் கல்வி அமைச்சா் ஆய்வு

16th Dec 2021 07:22 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது மாணவிகளுடன் அமைச்சா் கலந்துரையாடினாா்.

நிகழ்ச்சியில், மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, தமிழக அரசின் தலைமைக் கொறடா செழியன் ஆகியோா் உடனிருந்தாா்.

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் வை. முத்துராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவருமான பெரியண்ணன் அரசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

உதயநிதி முக்கிய பொறுப்புக்கு வருவாா்

ADVERTISEMENT

புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள நகா்மன்றத்தில் நகர திமுக சாா்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,

அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் தலைவராக உதயநிதி ஸ்டாலின் வலம் வருகிறாா். அடுத்த பிறந்த நாளுக்குள் அவா் அமைச்சராக வந்தால் அனைவரும் வரவேற்போம். அவரது சேவை சேப்பாக்கம் தொகுதிக்குள் மட்டும் சுருங்கிவிடாமல் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்றாா் மகேஷ்.

நிகழ்ச்சியில், புதுகை எம்எல்ஏ முத்துராஜா, நகர திமுக செயலா் க. நைனாமுகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT